2021 மே 12, புதன்கிழமை

விழிப்புணர்வுப் பேரணி

Suganthini Ratnam   / 2016 ஜூலை 29 , மு.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

போதைப்பொருள் பாவனைக்கு எதிரான விழிப்புணர்வுப் பேரணி, மட்டக்களப்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைந்து வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்களம் மற்றும் சமுதாயஞ்சார் சீர்திருத்தி திணைக்களத்தினால் இந்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

இந்தப் பேரணி மட்டக்களப்பு கல்லடியிலிருந்து ஆரம்பமாகி மண்முனை வடக்கு பிரதேச செயலகம் வரை இடம் பெற்றது.
இந்த விழிப்புனர்வு பேரணியில் மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் ஏ.தவராஜா உட்பட உதவி பிரதேச செயலாளர் மற்றும் கிராம உத்தியோகத்தர்கள், வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமுதாயஞ்சார் சீர்திருத்தி திணைக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .