2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

ஹக்கீம் பணித்தால் இராஜினாமா செய்வேன் : ஹபீஸ்

Administrator   / 2015 ஓகஸ்ட் 26 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் இராஜினாமா செய்யுமாறு பணித்தால் நான் உடனேயே எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்து விடுவேன் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சார்பில் பெயரிடப்பட்டுள்ள டாக்டர் ஏ.ஆர்.எம்.ஹபீஸ் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸூக்காக இரண்டு பேருக்கு இடம் ஒதுக்கி கொடுக்கப்பட்டுள்ளது.அதில் ஒருவராக எனது பெயரும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அதை இராஜினாமாச் செய்து மற்றையவர்களுக்கு வழங்குவதற்காக நம்பிக்கை விசுவாசத்தின் அடிப்படையிலேயே எனது பெயர் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் என்னை அதை  இராஜினாமா செய்ய சொன்னவுடனேயே நான் இராஜினாமா செய்துவிடுவேன். அது எனக்குரிய பதவியல்ல என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .