2021 ஏப்ரல் 23, வெள்ளிக்கிழமை

ஹெரோய்ன் வைத்திருந்த ஒருவர் காத்தான்குடியில் கைது

Princiya Dixci   / 2016 மார்ச் 29 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.நூர்தீன்

மட்டக்களப்பு, காத்தான்குடிப் பொலிஸ் பிரிவில் ஹெரோய்ன் வைத்திருந்ததாகக் கூறப்படும் ஒருவரை, நேற்று திங்கட்கிழமை (28) மாலை காத்தான்குடிப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவரிடமிருந்து 60 கிராம் ஹொரோய்ன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. 

காத்தான்குடிப் பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் காத்தான்குடி இரண்டாம் குறிச்சி மீன்பிடி இலாஹா வீதியில் வைத்து இந்த சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர். 

இது தொடர்பில் விசாரணைகள் நடத்தி வருவதாகவும் குறித்த சந்தேகநபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் காத்தான்குடிப் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X