2021 மார்ச் 01, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் 07 பேர் சமாதான நீதவான்களாக நியமனம்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 07 , மு.ப. 04:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்ட நீதி நிர்வாக வலயத்தில் 07 பேருக்கு சமாதான நீதவானுக்கான நியமனக் கடிதங்கள் ஞாயிற்றுக்கிழமை (06) வழங்கப்பட்டன.

இது தொடர்பில் நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கைப் பரப்புச் செயலாளரும் உற்பத்தித்திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியுமான யூ.எல்.எம்.என்.மூபீன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில், நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமின் சிபாரிசில் நீதி அமைச்சினால் மேற்படி 07 பேருக்கும்  நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

ஓய்வுபெற்ற ஆசிரியர்களான எம்.எம்.ஆதம் லெப்பை, எம்.எச்.எம்.இஸ்மாயில், எம்.எம்.இப்றாஹீம், காத்தான்குடி நகரசபை வருமான பரிசோதகர் எம்.எம்.எம்.பாரூக், சமூக சேவையாளர்களான எம்.ஐ.எம்.ஜவ்ஸான், ஏ.பி.அபூ, எம்.இம்தியாஸ்  ஆகியோரே சமாதான நீதவான்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிகழ்வில் மௌலவி எஸ்.எம்.எம்.முஸ்தபா (பலாஹி), அல் அமீன் வித்தியாலய பிரதி அதிபர் யாஸிர் அறபாத், உற்பத்தி திறன் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சின் மக்கள் தொடர்பு அதிகாரியின் இணைப்பாளர் தௌபீக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .