2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

கடந்த 10 மாதத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 650 பேர் கைது

Super User   / 2011 ஒக்டோபர் 22 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோதமாக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட 650 பேர் மாவட்ட  மதுவரி  திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட மதுவரி  அத்தியட்சகர் நடராஜா சுசாதரன் தெரிவித்தார்.

களுவாஞ்சிக்குடி, மட்டக்டகளப்பு ஏறாவூர், வாழைச்சேனை மற்றும் வாகரை ஆகிய நீதிமன்றங்களில் இவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டு சுமார் 30 இலட்சம் ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இவர்களில் அதிகமானோர் மீளக்குடியேறிய வெல்லாவெளி பிரதேச செயலக பிரிவிலேயே கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--