Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 05 , மு.ப. 10:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
மட்டக்களப்பு, மாவிலாறு கிராமத்தில் மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மின்னிணைப்புத் திட்டம் எதிர்வரும் 10ஆம் திகதி உத்தியோகபூர்வமாக திறந்துவைக்கப்படவுள்ளது.
180 இலட்சம் ரூபாய் பெறுமதியில் நிர்மாணிக்கப்பட்ட இவ் மின்னிணைப்புத் திட்டத்தை பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்துசிவலிங்கம் திறந்து வைக்கவுள்ளதாக முத்துசிவலிங்கத்தின் ஊடகச் செயலாளர் மு.நடேசலிங்கம் தெரிவித்துள்ளார்.
பிரதியமைச்சர் முத்துசிவலிங்கத்தின் வேண்டுகோளுக்கமைய, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஏற்பாட்டிலும் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவின் வழிகாட்டலிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் மீள்குடியேற்றப் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் கூறினார்.
22 minute ago
41 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
41 minute ago
1 hours ago