2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

மயிலவெட்டுவானில் வெள்ளத்தில் சிக்கியிருந்த 103பேர் படகுகள் மூலம் மீட்பு

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 18 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஏ.எச்.ஏ.ஹுஸைன்)

ஏறாவூர் பிரதேச செயலகத்திற்குட்ட மயிலவெட்டுவான் கிராமத்தில் நேற்றிரவு தொடக்கம் வெள்ளத்தினால் சூழப்பட்டிருந்த 103பேர் இன்று செவ்வாய் காலை படகுகளை அனுப்பி மீட்கப்பட்டதாக பிரதேச செயலாளர் உ.உதயஸ்ரீதர் தெரிவித்தார்.

இவர்களை மீட்கும் பணியில் கடற்படையினரும் பிரதேச சபை மற்றும் இடர் முகாமைத்துவ அதிகாரிகளும் உதவியிருந்ததாகவும் அவர் சொன்னார்.

இதேவேளை ஏறாவூர்ப்பற்று செங்கலடி பிரதேச செயலகப் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் 13 முகாம்களில் 1098 குடும்பங்களைச் சேர்ந்த 4400 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் ஏனைய சேத விவரங்கள் திரட்டப்பட்டு வருவதாகவும்  பிரதேச செயலாளர் மேலும் சொன்னார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .