2020 நவம்பர் 29, ஞாயிற்றுக்கிழமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் 104 சிறுவர் துஷ்பிரயோகங்கள்

Kogilavani   / 2010 ஒக்டோபர் 22 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.சுக்ரி )

மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த செப்டெம்பர் மாதம் வரை 104 சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் , சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலளார் பிரிவுகளிலிருந்தும் சிறுவர் துஷ்பிரயோகங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பாலியல் துஷ்பிரயோகம்,  உடலியல் ரீதியான சித்திரவதை,  போசாக்கு வழங்காமை,  மருத்துவ வசதிகள் செய்யப்படாமை போன்ற முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளே இவற்றில் அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளன.

இவற்றில் சிறுவர்கள் தொடர்பாக 78 முறைப்பாடுகளும் சிறுமிகள் தொடர்பாக 26 முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

இம்முறைப்பாடுகள் பொலிஸ் நிலையங்களின் மூலமாகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை மூலமாகவும் ஏனைய வழிகளிலும் மாவட்ட சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு கிடைத்ததாகவும் , இம் முறைப்பாடுகள்  தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ் அதிகாரி மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .