2021 ஜனவரி 16, சனிக்கிழமை

மட்டு. பொலிஸ் நிலையத்தில் 133 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் பதிவு

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 18 , மு.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)

மட்டக்களப்பு பொலிஸ் நிலையத்தில் மாத்திரம் 133 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜெயசுந்தர நேற்று தெரிவித்தார்.

கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 31ஆம் திகதியிலிருந்து (31.10.2011) இந்த வருடம் ஒக்டோபர் மாதம்  31ஆம் திகதிவரை (31.10.2012) சொத்துக்கள் சார்ந்த 103 குற்றவியல் சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகள் கிடைத்தன. இவற்றில் 51 சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன. மீதி 52 சம்பவங்களுக்கு தீர்வு காணப்படவேண்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

மட்டக்களப்பு பார் வீதியிலுள்ள வீடொன்றில் கடந்த வியாழக்கிழமை பட்டப்பகலில் களவு போயுள்ளது. இதன்போது 294,000 ரூபா பெறுமதியான தங்கநகைகள் களவுபோயுள்ளன.  இக்களவு தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .