2025 செப்டெம்பர் 20, சனிக்கிழமை

14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய இளைஞனுக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 21 , மு.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜிப்ரான்)

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்திய 23 வயது இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற நீதிபதி வீ.இராமகமலன் நேற்று புதன்கிழமை உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மஞ்சந்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுமியை சின்ன உப்போடையைச் சேர்ந்த 23 வயது இளைஞன் அழைத்துச்சென்று பாலியல் வல்லுறவிற்குட்படுத்தியதாக தெரியவருகின்றது.

குறித்த இளைஞனை காத்தான்குடி பொலிஸார் கைது செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் செய்தபோது, இவ்விளக்கமறியல்  உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X