Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 16 , மு.ப. 05:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஸரீபா,எம்.சுக்ரி)
இந்த ஆண்டு நடைபெற்று முடிவடைந்த ஐந்தாம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நான்கு மாணவர்கள் 190 புள்ளிகளை பெற்று முதலாமிடங்களை பெற்றுள்ளதாக மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஆரம்பக் கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளர் ஐ.எம்.இப்றாகீம் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் காத்தான்குடி கல்விக்கோட்டத்திலுள்ள மீராபாலிகா மகாவித்தியாலய தேசிய பாடசாலை மாணவி ரஸுல் பாத்திமா ஸீனா, ஓட்டமாவடி கல்விக்கோட்டத்திலுள்ள ஓட்டமாவடி மத்திய கல்லூரியைச் சேர்ந்த என்.ஏ.நகார், ஏ.ஜி.;ஹசன் சறூக், எம்.யு.எம்.அர்ஸாத் ஆகிய நான்கு மாணவர்களும் தலா 190 புள்ளிகளை பெற்று முதலாமிடங்களை பெற்றுள்ளனர்.
இதுவரை மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தில் 386 மாணவர்கள் சித்தியடைந்திருப்பதாகவும் அதில் காத்தான்குடி கல்விக் கோட்டத்தில் 171 மாணவர்களும் ஓட்டமாவடி கல்விக்கோட்டத்தில் 152 மாணவர்களும் ஏறாவூர் கல்விக்கோட்டத்தில் 63 மாணவர்களும் சித்தியடைந்திருப்பதாகவும் உதவிக் கல்விப்பணிப்பாளர் இ.எம்.இப்றாகீம் மேலும் தெரிவித்தார்.
அந்த வகையில் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் 41 மாணவர்களும் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் 34 மாணவர்களும் வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகாவித்தியாலயத்தில் 16 மாணவிகளும் ஓட்டமாவடி பாத்திமா பாலிகாவில் 15 மாணவிகளும் மீராவோடை அல்ஹிதாயா வித்தியாலயத்தில் 04 மாணவிகளும் பிறைந்துரைச்சேனை அஸ்ஹர் வித்தியாலயத்தில் 05 மாணவர்களும் செம்மண்ணோடை அல்ஹம்றா வித்தியாலயத்தில் 01 மாணவனும் ரிதிதென்ன அல்ஹம்றா வித்தியாலயத்தில் 08 மாணவர்களும் தியாவட்டுவான் அறபா வித்தியாலயத்தில் 02 மாணவர்களும் ஓட்டமாவடி ஹிஜ்ரா வித்தியாலயத்தில் 05 மாணவர்களும் மாவடிச்சேனை அல்இக்பால் வித்தியாலயத்தில் 03 மாணவர்களும் பிறைந்துரைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் 06 மாணவர்களும் பதுரியா நகர் அல்மினா வித்தியாலயத்தில் 01 மாணவனும் வாழைச்சேனை வை.அஹமட் வித்தியாலயத்தில் 02 மாணவர்களும் காகித நகர் மில்லத் வித்தியாலயத்தில் 02 மாணவர்களும் மீராவோடை அமீர்அலி வித்தியாலயத்தில் 07 மாணவர்களுமாக 152 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
16 Nov 2025
16 Nov 2025