Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 11 , மு.ப. 04:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜவ்பர்கான்,றிபாயா நூர்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு 16,634 மில்லியன் ரூபாய் செலவில் 2,857 அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இவ்வபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராயும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று திங்கட்கிழமை காலை மாவட்ட அபிவிருத்தி குழு இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் சிறுவர் விவகார மகளிர் அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, பா.அரியநேந்திரன், எஸ்.லோகேஸ்வரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் பசீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.எல்.சுபைர் , கிழக்கு மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள், திணைக்களத் தலைவர்கள், படையதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலரும் பங்கேற்றனர்.
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதி ஒதுக்கீடு, கமநெகும, வெளிநாட்டு நிதிநிறுவனங்களின் நிதி, அமைச்சுக்களின் நிதி, கிழக்கு மாகாணசபை ஆகிய நிதி ஒதுக்கீடுகளின் மூலம் இவ்அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த அபிவிருத்திப் பணிகளில் இதுவரை 70 சதவீதமான பணிகள் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago