Super User / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 08:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர். அனுருத்தன்)
தனது 7 மாத குழந்தையொன்றை விற்பனை செய்த திருமணமாகாத. 17 வயதான பெண்ணொருவரை வாகரை பொலிஸார் நேற்றிரவு கைது செய்துள்ளனர்.
சில தினங்களுக்கு முன் வாழைச்சேனையைச் சேர்ந்த தம்பதியொன்றுக்கு 10 ஆயிரம் ரூபாவுக்கு இக்குழந்தையை அவர் விற்பனை செய்துள்ளதாக வாகரை பொலிஸார் தமிழ் மிரருக்குத் தெரிவித்தனர்.
திருமணமாகாத தனக்கு பிறந்த இக்குழந்தையை பதிவு செய்து வளர்ப்பதில் சிக்கல்கள் இருந்ததால் அதை விற்றதாக அப்பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார். குழந்தையை வாங்கிய தம்பதியினரும் இன்று காலை வாகரை பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டிருந்திருந்தனர். இவர்கள் மூவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் வாகரை பொலிஸார் தெரிவித்தனர்.
8 minute ago
14 minute ago
23 minute ago
33 minute ago
G.Pramanathan Friday, 15 October 2010 08:50 PM
குழந்தையின் தந்தை எங்கேயோ?
Reply : 0 0
G.Pramanathan Friday, 15 October 2010 08:52 PM
தகாத உறவினால் தாயானாரா அல்லது காதலித்து ஏமாற்றப்பட்டாரா?
Reply : 0 0
K.Rushangan Friday, 15 October 2010 09:04 PM
பிள்ளையைப் பெற்று விற்ற தாயைக் கைதுசெய்த பொலிஸ், பிள்ளை பிறக்கக் காரணமாகவிருந்த தந்தையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துமா?
Reply : 0 0
Niththi Friday, 15 October 2010 10:06 PM
நல்ல கேள்வி கேட்டீர்கள், ருஷாங்கன்.
Reply : 0 0
Fahim Friday, 15 October 2010 10:49 PM
கட்டாயமாக பிள்ளையின் தந்தையையும் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இது நிச்சயம் காதலித்து ஏமாற்றப்பட்ட கதையாகத்தான் இருக்கும்!
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
14 minute ago
23 minute ago
33 minute ago