2021 மார்ச் 02, செவ்வாய்க்கிழமை

20 வருடங்களுக்கு முன் இடம்பெயர்ந்த 100 குடும்பங்களை மீளக்குடியமர்த்த நடவடிக்கை

Menaka Mookandi   / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 12:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு ஏறாவூர் 4ஆம், 5ஆம் குறிச்சிகளிலிருந்து 20 ஆண்டுகளுக்கு முன்பு தமது பாதுகாப்பு காரணங்களுக்காக  இடம்பெயர்ந்த தமிழ் குடும்பங்களை மீண்டும் மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகளை தான் மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா தெரிவித்தார்.

1990ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் அதன் பின்னரும் அவ்வப்போது அப்பகுதியில் இடம்பெற்ற இன வன்முறைகள் காரணமாக குறித்த பகுதியைச் சேர்ந்த சுமார் நூறு குடும்பங்கள் தமது இருப்பிடங்களை இழந்த நிலையில் வெளியேறி தற்போது வேறு இடங்களில் தங்கியுள்ளனர்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பொன். செல்வராசா, “இக்குடும்பங்களின் மீள்குடியேற்றத்தின் அவசியத்தை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாகவும், இக்குடும்பங்களுக்கான தற்காலிக இருப்பிடங்கள் அமைப்பதற்கு நோர்வே அகதிகள் பேரவை என்ற சர்வதேச தன்னார்வ தொண்டர் அமைப்பின் உதவி நாடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .