2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

20 வருடங்களின் பாதை திறப்பு

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு, ஏறாவூர் பிரதேசத்தில் கடந்த 20 வருடங்களாக மூடப்பட்டிருந்த 4ஆம், 5ஆம் குறிச்சிகளின் உள் வீதிகள் பொது மக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்து விடப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் நிலையம் மற்றும் பொலிஸாரின் வதிவிடங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய உயர் பாதுகாப்பு வயலம் காரணமாகவே குறித்த பகுதியின் உள் வீதிகள் கடந்த 20 வருடங்களாக மூடப்பட்டிருந்தன.

மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா இது தொடர் பாக மட்டக்களப்பு பிராந்திய பொலிஸ் மா அதிபர் திலக் விஜேய குணவர்த்தனாவை சந்தித்து, குறித்த உள் வீதிகள் தொடர்ந்து மூடப்பட்டிருப்பது குறித்து அவரது கவனத்திற்கு கொண்டு வந்ததுடன் மீண்டும் அவ்வீதிகளை  திறக்குமாறும் கோரியிருந்தார்.

இதனையடுத்து  முதற்கட்டமாக 05 உள் வீதிகள் திறக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--