2020 செப்டெம்பர் 27, ஞாயிற்றுக்கிழமை

2000 குளங்களை புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 27 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஜவீந்திரா, ஜதுசன்)

2,000 குளங்களை புனரமைப்பதற்கான வேலைத்திட்டத்தின் ஆரம்ப விழா இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு மட்டக்களப்பு வெல்லாவெளி பன்குளத்தில் நடைபெறவுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித்திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதித்திட்டப் பணிப்பாளர் அருணாச்சலம் விஜயகிருஷ்ணன் தெரிவித்தார்.

இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகவும் அவர் கூறினார்.

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள்எழுச்சித்திட்டத்தின் திட்டப்பணிப்பாளர் எஸ்.கே.லியனகேயின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் ,  பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, கிழக்கு மாகாண ஆளுநர் மொஹான் விஜயவிக்கிரம,  மீள்குடியேற்றப்  பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், சிறுவர் அபிவிருத்திப் பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா, கமநல சேவைகள் வனவளத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன, கிழக்கு மாகாண முதலமைச்சர்
சிவநேசத்துரை சந்திரகாந்தன் மற்றும் பிரதேச சபைத்தவிசாளர்கள், பிரதேச செயலாளர்கள், விவசாயிகள்,  பொதுமக்களெனப் பலரும் கலந்துகொள்ளவுள்ளதாக அருணாச்சலம் விஜயகிருஷ்ணன் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--