Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 16, புதன்கிழமை
Super User / 2010 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்)
தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகம், உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் சுகாதார திணைக்களத்துடன் இணைந்து ஸ்ரிக்கர் ஒட்டும் நடவடிக்கையினை ஆரம்பித்து வைத்தது.
இதன் ஆரம்ப வைபவம் இன்று காலை களுதாவளையிலுள்ள மண்முனை தென் எருவில் பற்று பிரதேச பையில் நடைபெற்றது.
இன்று காலை களுதாவளை பிரதேச சபையில் மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ந.சத்தியானந்தி தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் பிரதேச சபை தவிசாளர் எஸ்.சிவகுணம், களுவாஞ்சிக்குடி மாவட்ட வைத்திய அதிகாரி எஸ் தட்சணாமூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொணடனர்.
டெங்கு வாரத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட கடந்த 16ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்ட தேசிய டெங்கு ஒழிப்பு வார நடவடிக்கைகளில் இன்றைய தினம் உள்ளுராட்சி அமைச்சுக்குரியதாகும். அதன் அடிப்படையில் இவ்வேலைத்திட்டம் நடைபெறுவதாக மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் திருமதி ந.சத்தியானந்தி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Jul 2025