2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

துப்பாக்கி பறிப்பு சம்பவம் குறித்து தமிழ் கட்சிகளுடன் இராணுவம் கலந்துரையாடல்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 22 , மு.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன்)

மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தில் அரசியல் கட்சி அலுவலகங்களை வைத்திருக்கும்  தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், இராணுவ அதிகாரிகளுக்குமிடையில் நேற்று சனிக்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிப் பறிப்புச் சம்பவம் குறித்து இதன்போது விசேடமாக கலந்துரையாடப்பட்டது.

23–3ஆவது இராணுவ படைப்பிரிவு தலைமையகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் டெலோ, தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், ஈ.பி.டி.பி, புளொட், ஈரோஸ் மற்றும் ஈ.பி.ஆர். எல்.எப். பத்மநாபா அணி ஆகிய கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்

தற்போதைய பாதுகாப்பு நிலைமை, அதனைத் தொடர்ந்து பேணுதல், அதற்காக தமிழ் கட்சிகளின் ஒத்துழைப்பை பெறுதல் போன்ற விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதாக இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் பொதுச் செயலாளர் எட்வின் சில்வா கைலேஸ்வரராஜா இச் சந்திப்பு தொடர்பாக தெரிவிக்கையில், “கடந்த வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸ் சார்ஜன்ட் ஒரொருவரின் துப்பாக்கி அடையாளம் தெரியாத ஆட்களால் பறித்துச் செல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக இங்கு பேசப்பட்டு தமிழ் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்கள் கேட்டறியப்பட்டது.

கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய எவராவது  திட்டமிட்ட நடவடிக்கைகளுக்காக  இதனை பறித்து சென்றிருக்கலாம் என்பதை தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர்.

இப்படியான குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களை கண்டு பிடிப்பதற்கு பூரண ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். “பறித்து செல்லப்பட்ட துப்பாக்கி கண்டு பிடிக்கப்படும் வரை முக்கிய இடங்களில் வீதிச் சோதனைகள் மேற் கொள்ளப்படும். அதேநேரம் சந்தேகத்திற்கிடமான இடங்களில் வீடுகள் சோதனையிட வேண்டி நேரிடும்“
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X