2025 ஜூலை 19, சனிக்கிழமை

மட்டக்களப்பில் பாதுகாப்பு சோதனைகள் அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 23 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன், றிபாயநூர், எல்.தேவ், ஜௌபர்கான்)
 

மட்டக்களப்பு நகர் உட்பட சில பிரதேசங்களில் பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் மீண்டும் வீதிச் சோதனைகளும் சந்தேகத்திற்கிடமான பகுதிகளிலுள்ள வீடுகளில் சோதனை நடவடிக்கைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
 
யுத்தம் முடிவடைந்த நிலையில் ஒரு வருடத்திற்கு மேலாக சகல சோதனை நடவடிக்கைகளும் இம்மாவட்டத்தில் நீக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த வெள்ளிக்கிழமை இரவு புகையிரத நிலையத்திற்கு முன்பாக பொலிஸ் சார்ஜன் ஒருவரின் துப்பாக்கி அடையாளம் தெரியாத ஆட்களினால் பறித்து செல்லப்பட்ட சம்பவததையடுத்தே இந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்பு தரப்பினர் தெரிவிக்கின்றனர். 
 
நேற்றுமுன்தினம் சனிக்கிழமை மட்டக்களப்பு நகரில் அலுவலகங்களை வைத்துள்ள தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகளை அழைத்த 23 - 3 ஆவது இராணுவ படைப் பிரிவு அதிகாரிகள், இச்சோதனை நடவடிக்கைகள் தொடர்பாக தெரிவித்தனர்.
 
பொதுமக்களின் தகவலின்படி கடந்த சனிக்கிழமை மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தின் பாரதிபுரத்திலுள்ள சில வீடுகள் பாதுகாப்பு தரப்பினரால் சோதனையிடப்பட்டுள்ளது.
 
மட்டக்களப்பு நகரப் பிரதேசத்தைப் பொறுத்தவரையில் புதுப்பாலம், வெள்ளைக்குட்டி கடைச் சந்தி மற்றும் புகையிரத நிலையச் சந்தி உட்பட சில கேந்திர இடங்களில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு சோதனைகள் இடம்பெறுகின்றன.
 
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X