2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

வடமுனை மீள்குடியேற்ற கிராம அபிவிருத்தித்திட்ட பணிகள் ஆரம்பம்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , மு.ப. 09:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(ஜௌபர்கான்,றிபாயா நூர்)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள வடமுனை மீள்குடியேற்றக் கிராமத்தின் அபிவிருத்தி வேலைகளுக்காக கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் 75 இலட்சம் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளார்.

பல்தேவைக் கட்டிடம், பாலர் பாடசாலை, பொது மலசலகூடம், போக்குவரத்துக்கான சிறிய ரக உழவு இயந்திரம், விவசாய பொதுக் கிணறு, கால்நடை வளர்ப்பு, நன்னீர் மீன்பிடி, தொழிலாளர்களுக்கு தோணிகள் மற்றும் வலைகள் போன்ற வசதிகளை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான திட்டங்கள் இதனுள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன.

இக்கிராமத்தின் அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கும் நிகழ்வு நேற்று  பிரதேச செயலாளர் தவராஜா தலமையில் முதலமைச்சர் சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பூ.பிரசாந்தன், கோரளைப்பற்று பிரதேச தவிசாளர் உதயஜீவதாஸ் ஆகியோரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X