2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

அரசியல் பலத்தை அதிகரிப்பதன் மூலமும் அனைத்து வழிகளிலும் சிறந்து விளங்க முடியும்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 24 , பி.ப. 12:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

அனைவரும் ஒற்றுமையாக செயற்பட்டு நமது அரசியல் பலத்தினை அதிகரிப்பதன் மூலமே நாம் அனைத்து வகைகளிலும் சிறந்து விளங்க முடியும். ஜனாதிபதியின் பெருந்தன்மையான செயற்பாடுகளாலேயே நம் பிரதேசங்களுக்கு அபிவிருத்திகளுக்கான பல்வேறு வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நடைபெறுகின்ற அபிவிருத்திகள் யாவும் அரசினுடைய நிதிகளே என மீள்குடியேற்றப்பிரதி அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திக்கட்சியின் பிரதித் தலைவருமான விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்தார்.

இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் மட்டக்களப்பு படுவான்ரை, புதுமண்டபத்தடி மீள்எழுச்சித் திட்டத்தின் கீழான வாழ்வாதார அபிவிருத்தி நிலைய திறப்பு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அபிவிருத்தித் திட்டங்களைப் பொறுத்தவரையில் குறிப்பிட்டளவான காலம் இது நிறைவடைவதற்குத் தேவை என்பதை புரிந்து கொள்ளாத சிலர் பல்வேறு விதமாகவும் பேசுகின்றனர். இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள திட்டம் கூட பயனைத் தருவதற்கு இரண்டு வருடங்களாவது தேவை.

நீர்ப்பாசனம், கல்வி, விவசாயம், வீடமைப்பு என பல்வேறு திட்டங்கள் மூலம் அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

விவசாயத்தினை எமது பிரதேசத்தில் அபிவிருத்தி செய்வதன் மூலம் அனைத்து பகுதிகளையும் அபிவிருத்தி செய்துவட முடியும். இப்பொழுது ஊன்னிச்சைக்குளம் உட்பட பல வேலைத்திட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இவை தவிரவும் பல்வேறு வேலைகள் நடைபெறவுள்ளன எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், கிழக்கு மாகாண சபைஉறுப்பினர் எட்வின் கிருஸ்ணானந்தராஜா, மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச்செயலாளர் திருமதி உருத்திரமலர் ஞானபாங்கரன், இணைப்புச்செயலாளர் ஆர்.ரவீந்திரன் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் வில்லரெத்தினம், மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி அதிபர் எஸ.பத்மநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--