Suganthini Ratnam / 2010 ஓகஸ்ட் 26 , மு.ப. 09:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எல்.தேவ்.)
கிழக்கு மாகாண சபையின் பொதுமக்கள் முறைப்பாட்டுப் பெட்டிகள் வழங்கும் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. திருமலையில் கடந்த 16 ஆம் திகதி நடைபெற்றது. அதேபோன்று அம்பாறையில் இன்றையதினம் நடைபெறுகிறது.
இதேவேளை, மட்டக்களப்பில் நாளை வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மட்டக்களப்பு பிராந்திய உள்ளுராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்தில் இந்நிகழ்வு நடைபெறவுள்ளது. மட்டக்களப்பில் நடைபெறும் வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொள்கிறார்.
கிழக்கு மாகாண சபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கமைவாக அமைக்கப்பட்ட குழுவினரின் சிபார்சின் பேரில் இந்த முறைப்பாட்டுப் பெட்டிகள் உள்ளுரராட்சி சபைகளில் வைக்கப்படவுள்ளன.
இதன் மூலம் சேகரிக்கப்படும் பொதுமக்களின் ஆலோசனைகள் ஆராயப்பட்டு மக்கள் நலன் பேணும் திட்டங்களுக்குப் பயன்படும் வகையில் செயற்படுத்தப்படும் என கிழக்கு மாகாணசபை அறிவித்துள்ளது.
இந்த நிகழ்வுகளில் இக்குழுவின் தலைவர் பாயிஸ் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் உள்ளுராட்சி உறுப்பினர்களும் கலந்து கொள்வர்.

2 hours ago
19 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
19 Nov 2025