Menaka Mookandi / 2010 ஓகஸ்ட் 31 , மு.ப. 09:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு, வாழைச்சேனை பிரதேசத்தில் யுத்த இடம்பெயர்வின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட கிராமங்களான முறுத்தானை, கோராவெளி மற்றும் பொண்டுகள்சேனை ஆகிய கிராமங்களில் ஜி.ரி.இஸட் மற்றும் நெக்டெப் ஆகிய அமைப்புக்களின் உதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட முன்பள்ளிக் கட்டிடங்கள் திறந்துவைக்கப்பட்டன.
நிகழ்வின் பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைத்தலைவர் க.உதயஜீவதாஸ் ஆகியோர் கிராம மக்களினால் வரவேற்கப்படுவதையும்,
முதலமைச்சர் மற்றும் வாழைச்சேனை பிரதேச சபைத்தலைவர் ஆகியோர் கட்டிடங்களை திறந்து வைப்பதையும படங்களில் காணலாம்.
இந்நிகழ்வுகளில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், "கிழக்கு மாகாணத்தில் முன்பள்ளி கல்வியை அபிவிருத்தி செய்வதற்காக மாகாண சபையினால் பல் வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாகவே முன்பள்ளிகளுக்கு நிரந்தர கட்டிடம் அமைக்கபபட்டு வருகின்றது. என்றார்
17 minute ago
24 minute ago
39 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
24 minute ago
39 minute ago