Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 06 , மு.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர், ஜௌபர்கான்)
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மின்சாரமில்லாத கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கி மின்சார அபிவிருத்தியை மேற்கொள்வது தொடர்பாக ஆராயும் விசேட மாநாடு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுறை சந்திரகாந்தன் தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில் கிழக்கு மாகாண அமைச்சர்களான எம்.எஸ்.உதுமாலெவ்வை எம்.எஸ்.சுபைர் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் விமலநாதன் இலங்கை மின்சார சபையின் கிழக்கு மாகாண பிரதி முகாமையாளர் தவநேஸ்வரன் உட்பட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் பிரதேச செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இதில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மின்சாரமில்லாத கிராமங்களுக்கு மின்சாரத்தினை கிழக்கு மாகாண சபையும் மற்றும் இலங்கை மின்சார சபையும் இணைந்த வழங்குவது தொடர்பாக ஆராயப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .