Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 09 , பி.ப. 02:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சக்திவேல்)
கோப்பாவெளி, பெரியபுல்லுமலை இலுப்பட்டிச்சேனை மரப்பாலம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் 460 குடும்பங்களுக்கு இதுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை என அந்தப் பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இந்த மக்கள் யுத்தத்தினால் இடம்பெயர்ந்து ஏறாவூர் மட்டக்களப்பு, போன்ற இடங்களில் வாழ்ந்து தற்போது தமது சொந்தக் கிராமங்களில் மீளக்குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
எனினும், அவர்களுக்குரிய பிரதான தேவைகளுள் ஒன்றான மின்சாரம் அதுவரை பெற்றுக்கொடுக்கப்படாமலிருப்பது கவலை தரும் விடயமாகும்.
அங்கு ஏனைய கட்டுமானப்பணிகள், தண்ணீர்ப் பிரச்சினை என்பன உள்ளபோதிலும் ஆகக் குறைந்தது மின்சாரத்தையாவது பெற்றுத்தர அதிகாரிகள் முன்வருவார்களா என அந்த மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago