Super User / 2010 செப்டெம்பர் 14 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஜவ்பர்கான்)
யுத்தம் மற்றும் சுனாமியினால் ஜீவனோபாவத்தை இழந்த குடும்ப பெண்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப சுமார் 14 இலட்சம் ரூபாய் நிதி 53 பெண்களுக்கு இன்று புதன்கிழமை பகிர்ந்தளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு திருமலை மறை மாவட்ட ஆயர் கலாநிதி கிங்ஸ்லி சுவாமி பிள்ளையின் வழிகாட்டலில் ஹரிடாஸ் எகெட் நிறுவனத்தினால் களுதாவளை ஸ்ரீ முருகன் ஆலய அன்னதான மண்டபத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் இந்நிதி பகிர்ந்தளிக்கப்பட்டதாக எகெட் நிறுவன ஊடக பொறுப்பாளர் எஸ்.மைக்கல் தெரிவித்தார்.
மீன்பிடி, கோழி வளர்ப்பு, சிறு கடை வியாபாரம் உட்பட சுயதொழிலில் ஈடுபட இந்நிதியை பயன்படுத்த முடியும். கல்லாறு, களுதாவளை, தேத்தாத்தீவூ ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்களே இந்நிதியை பெற்றுக்கொண்டனர்.
20 minute ago
28 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
28 minute ago
36 minute ago
54 minute ago