Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை
Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர், ரி.எல். ஜவ்பர்கான்)
ஐ.நா. உதவி வழங்குநர்கள் மற்றும் ஐ.நாவின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் நீல் பூனே உட்பட ஐ.நா. பிரதிநிதிகள் அடங்கிய குழு நேற்று மாலை மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு விஜயம் செய்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் அதிகாரிகளை சந்தித்தது.
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடை பெற்ற இச்சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெற்று வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் மீள் குடியேற்ற பிரதேசங்களில் செய்யப்பட்டு வரும் அபிவிருத்தி திட்டங்கள் குறித்தும் மாவட்ட அரசாங்க அதிபர் விளக்கிக் கூறியதுடன்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி தொடர்பில் செயற்படுத்தவேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும்;
விளக்கி கூறினார்.
இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான வதிவிடப்பிரதிநிதி அஸதுர் றஹ்மான்இ மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா நெடுஞ்செழியன் உட்பட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
-------
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Jul 2025
14 Jul 2025
14 Jul 2025