2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

சனத் ஜயசூரிய மட்டக்களப்பு வருகிறார்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 16 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.எல்.ஜவ்பர்கான்)

நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரருமான சனத் ஜயசூரிய  நாளை மறுதினம் சனிக்கிழமை மட்டக்களப்பிற்கு விஜயம் செய்கிறார்.

மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் அழைப்பின் பேரில் விஜயம் செய்யும் அவர், பிரதியமைச்சரின் சகோதரர் ரெஜியின் நினைவாக நடைபெறும் 20க்கு 20 கடின பந்து கிரிக்கெட் போட்டியின் பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்வார்.

அவருடன் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற  உறுப்பினர் பிரபா கணேசன் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீ.எச்.பியசேன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .