2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

சிறந்த பிரதேச செயலகங்களை தெரிவு செய்வதற்கான போட்டிகள் ஆரம்பம்

Super User   / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                                   (ஜவ்பர்கான்)

சிறந்த பிரதேச செயலகங்களுக்கான ஜனாதிபதி விருது வழங்கலுக்கான போட்டிகள் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இப்போட்டியில் மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலகங்களும் மாவட்ட அரச அதிபர் தலைமையிலான உயர்மட்ட குழுவினரால் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களின் சிபாரிசின் பேரில் ஜனாதிபதி விருது வழங்கப்படவுள்ளது.

இத்திட்டதிதின் கீழ் இன்று காத்தான்குடி, ஆரையம்பதி பிரதேச செயலகங்கள் பரிசோதனை செய்யப்பட்டன்.

தினமும் இரு பிரதேச செயலகங்கள் போட்டிக்கென பரிசோதிக்கப்படவுள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.

இன்றைய பரிசோதனை நடவடிக்கைகளில் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன், மாவட்ட செயலக கணக்காளர் எஸ்.நேசராசா ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--