Super User / 2010 செப்டெம்பர் 15 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சிஹாரா லத்தீப்)
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி நீல் பூனே தலமையிலான உதவி வழங்குனர்கள் குழுவின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தின் இரண்டாவது நாளானா இன்று மாவட்டத்க்டின் பின் த்ங்கிய பகுதிகளான சந்திவெளி, திகிலிவட்டை, கிரான், குடும்பி மலை ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்தனர்.
இப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள், பாடசாலை அபிவிருத்தி, உள்ளக வீதி புனருத்தானம், குடி நீர் வசதி திட்டங்ம் மற்றும் வாழ்வாதார உதவி திட்டங்களை ஐ.நாவின் வதிவிட பிரதிநிதி நீல் பூனே தலமையிலான குழுவினர் நேரில் கண்டறிந்து கொன்டதுடன் அப்பிரதேச மக்களின் தற்போதைய இயல்பு வாழக்கை பற்றியும் கேட்டறிந்து கொண்டனர்.
இலங்கை அரசாங்கத்தின் அனுமதியுடன் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்ட மக்களின் தேவைகளை தமது விஜயத்தின் போது கண்டறிந்து கொண்டதாகவும், இவற்றை முழுமையாக நிவர்த்தி செய்வதற்கான முழுமையான பங்களிப்பை ஐ.நா. முகவர் நிறுவனங்கள் மேற்கொள்ளும் என நீல் பூனே மட்டக்களப்பில் வைத்து தெரிவித்தார்.
.jpg)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .