2020 செப்டெம்பர் 18, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பில் நாளை துக்கதினம் அனுஷ்டிக்குமாறு த.ம.வி.புலிகள் கோரிக்கை

Super User   / 2010 செப்டெம்பர் 17 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

                                                          (எல்.தேவ்,  ஜெளபர்கான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் நிலையத்தல் இடம்பெற்ற பாரிய வெடிவிபத்தில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் துக்கதினம் அனுஷ்டிக்குமாறும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நஷ்டஈடு வழங்க அதிகாரிகளை பணிக்கவுள்ளதாகவும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண சபை உறுப்பனருமான எட்வின் கிருஷ்ணானந்தராஜா,  விடுதலைப் புலிகள் கட்சியின் மாவட்ட அமைப்பாளரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர். விடுத்துள்ளார்.

இது தொடர்பில் எட்வின் கிருஷ்ணானந்தராஜா விடுத்துள்ள அறிக்கையில்,

"நேற்று நடைபெற்ற வெடி விபத்து ஒரு துக்ககரமான விடயமாகும். சமாதானம் ஏற்பட்டு மக்கள் அமைதியான வாழ்க்கையை அனுபித்து வரும் நிலையில் இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டமைக்கு எனது கவலையைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இச்சம்பவத்தில் பலியான பொலிஸார், பொதுமக்கள், மற்றும் சீனத் தொழிலாளர்கள் ஆகியோருக்கு எமது அஞ்சலிகளைச் செலுத்துவதுடன் அவர்களின் குடும்பங்களுக்கு எமது கவலையைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

அத்துடன் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தல் வெள்ளை, கறுப்பு கொடிகளைக் கட்டி துக்கதினமாக அனுஷ்டிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

சீனத்தொழிலாளர்கள் எமது பிரதேசத்தின் அபிவிருத்தி வேலைகளில் ஈடுபட்டிருந்த வேளை இவ்வாறான அனர்த்தம் ஏற்பட்டுள்ளது துக்ககரமானதாகும். இனிவரும் காலங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் இது போன்ற வெடிமருந்துகளை பொதுமக்கள் நடமாடும் பிரதேசங்களிலோ பொலிஸ் நிலையங்களிலோ களஞ்சியப்படுத்தி வைப்பதனை தவிர்த்து வேறு இடங்களில் வைக்கும் படிம் வேண்டுகொள் விடுக்கிறேன்.

இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், சேதமடைந்த மிருக வைத்தியசாலை, ஆலயம்,  கமநல சேவை நிலையம் என்பவற்றுக்கும் நஷ்ட ஈடு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகளிடம் கோரிக்கை றேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


 

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--