2020 செப்டெம்பர் 26, சனிக்கிழமை

அதிரடிப்படை முகாம் கட்டிடத்தில் கரடியனாறு பொலிஸ் நிலையம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 20 , மு.ப. 07:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(சுபுன் டயஸ், அனுருத்தன், ஜவ்பர்கான், தேவ்)

கரடியனாறு பொலிஸ் நிலையக் கட்டிடம் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிவிபத்தில் சிதைவடைந்ததையடுத்து அருகிலுள்ள விசேட அதிரப்படை முகாம் கட்டிடத்தின் ஒரு பகுதியில் அப்பொலிஸ் நிலையம் இயங்க ஆரம்பித்துள்ளது.

இது தொடர்பாக நேற்று நடைபெற்ற வைபவத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன், பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் விஜயகுணவர்தன மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஐ.எம். கருணாரட்ன மாகாண சபை உறுப்பினர் பி. பிரசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இப்பொலிஸ் நிலையத்தின் தொலைபேசி இலக்கம் 065 - 3646228 ஆகும். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் தொலைபேசி இலக்கம் 065 - 3646229 ஆகும்.

மேற்படி வெடிவிபத்து தொடர்பாக குற்றப்பு புலனாய்வுப் பிரிவினரும் அரசாங்க பகுப்பாய்வுத் திணைக்களத்தைச் சேர்ந்த விசேட குழுவொன்றும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--