Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Menaka Mookandi / 2010 செப்டெம்பர் 21 , மு.ப. 05:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜௌபர்கான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளாவெளி பிரதேச செயலகப் பிரிவில் மாவட்ட மதுவரி அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்த 10 நிலையங்கள் முற்றுகையிடப்பட்டதாக மாவட்ட மதுவரி திணைக்கள பொறுப்பதிகாரி எஸ்.ஆனந்தன் தெரிவித்தார்.
மண்டுர் மற்றும் சிலபகுதிகளிலும் இத்தேடுதல் நடாத்தப்பட்டுள்ளது. இந்நிலைஉயில் கசிப்பு உற்பத்தி செய்யும் 6 இடங்களும் சட்ட விரோதமான முறையில் மதுபானம் விற்பனை செய்யும் நான்கு இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
நேற்று முன்தினம் நடாத்தப்பட்ட சுற்றவளைப்பின் கைப்பற்றப்பட்ட கசிப்பு தயாரிக்கப் பயன் படுத்தப்படும் உபகரணங்கள் சட்டவிரோத மதுபான போத்தல்கள் சந்தேக நபர்கள் எதிர்வரும் 30ஆம் திகதி மட்டக்களப்பு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பவுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago