2020 செப்டெம்பர் 23, புதன்கிழமை

கரடியனாற்றில் பொலிஸார் அன்னதானம்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

(றிபாயா நூர்)

மட்டக்களப்பு கரடியனாற்றில் நாளை வியாழக்கிழமை பொலிஸார் அன்னதானம் வழங்கவுள்ளனர்.

கரடியனாறு பொலிஸ் நிலைய வளாகத்தில்  கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆசிவேண்டி இவ் அன்னதானம் வழங்கப்படவுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உப்புல் சோமசிங்க தெரிவித்தார்.

கரடியனாறு விசேட அதிரடிப்படை முகாமில் முற்பகள் 12 மணிக்கு இவ் அன்னதானம் வழங்கப்படுவதுடன், பிரித் ஓதும் நிகழ்வும் இடம்பெறவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--