Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 22 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஆர்.அனுருத்தன்)
மட்டக்களப்பு வாழைச்சேனைப் பிரதேசத்தில் இருந்து ஒரு மாதத்திற்கு முன் ஆழ்கடல் மீன்பிடிக்கு சென்று காணாமல் போன மூன்று மீனவர்களும் சிலாபம் மீனவர்களினால் காப்பாற்றப்பட்டு பாதுகாப்பாக இருப்பதாக உறவினர்க்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 19ஆம் திகதி ஆழ்கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்றிருந்த பேத்தாழையைச் சேர்ந்த கணபதிப்பிள்ளை சிவராஜா (வயது 53) அவரது மகன் சிவராஜா ஜீவராசா (வயது 20) மற்றும் செல்லையா மனோகரன் (வயது 45) ஆகியோரே குறிப்பிட்ட மீனவர்கள் ஆவார்.
படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நடுக்கடலில் தத்தளித்த வேளை சிலாபப் பகுதி மீனவர்களினால் அவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாணசபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம் தெரிவித்தார்.
சிலாபம் கடற்தொழிற் தகவல் மையம் நேற்று செவ்வாய்க்கிழமை இது தொடர்பாக தகவல் அறிவித்துள்ளதாகவும் இதனை அடுத்து அம்மீனவர்களை உறவினர்கள் சந்திப்பதற்காக அங்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
39 minute ago
46 minute ago