2020 செப்டெம்பர் 30, புதன்கிழமை

மட்டு. வெடிப்பு சம்பவத்தை அடுத்து சீன நிறுவன வீதி நிர்மாண பணி இடைநிறுத்தம்

Menaka Mookandi   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ரி.எல்.ஜௌபர்கான்)

மட்டக்களப்பு, கரடியனாறு பொலிஸ் வளாகத்தில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினை அடுத்து, மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சீனாவின் "சைனா ஓவர்சீஸ் ஹோல்டிங் லிமிட்டட்" நிறுவனம் அந்த பணிகளை இடைநிறுத்தியுள்ளது.

சம்பவத்தினை அடுத்து, வேறு இடங்களில் இருந்து வீதி நிர்மாணப் பணிகளுக்கான கற்களை கொண்டு செல்வதில் ஏற்படும் மேலதிக செலவை தவிர்ப்பதற்காகவே தாம் பணிகளை இடைநிறுத்தி கொண்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சீன நிறுவனம் வீதி நிர்மாணப் பணிகளில் இருந்து விலகிக்கொண்டுள்ளதால், பெருந்தெருக்கள் அபிவிருத்தி அதிகார சபை குறித்த வீதி அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க முடியாத நிலைமையை எதிர்நோக்கியுள்ளது. மட்டக்களப்பு ‐ அம்பாறை வீதி, மட்டக்களப்பு ‐ வெருகல் வீதி, செங்கலடி ‐ பதுளை வீதி ஆகியவற்றை நிர்மாணிக்கும் பணிகளில் குறித்த சீன நிறுவனம் ஈடுபட்டு வந்தது.

கரடியனாறு காவற்துறை வளாகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த  சுமார் 2 ஆயிரம் கிலோ கிராம் எடை கொண்ட டயனமைட் ஏற்றிய கொள்கலன் வண்டிகள் வெடித்துச் சிதறியத்தால் இரு சீன பொறியிலாளர்கள் பலர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .