2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சர்வதேச சுற்றுலாத்தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்,எல்.தேவ்.)

சர்வதேச சுற்றுலாத் தினத்தை முன்னிட்டு கிழக்கு மாகாண முதலமைச்சர் செயலகத்தின் ஏற்பாட்டில் மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

இன்று காலை நீச்சலுடனான மரதன் ஓட்டம் மகாத்மா காந்தி சதுக்கத்தில் இருந்து கிழக்கு மாகாண முதலமைச்சரினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கோட்டமுனை வாவியினை நீந்தி கடந்த மரதனோட்ட வீரர்கள் மட்டக்களப்பு கல்முனை வீதியூடாக கல்லடி கடற்கரையைச் சென்றடைந்தனர்.

இந்தப் போட்டியில் முதலாம் இடத்தினை திருப்பெருந்துறையைச் சேர்ந்த வி.இருதயநாதனும்  இரண்டாம் இடத்தினை சந்திவெளி பாலயடி தோணாவை சேர்ந்த நா.சந்திரகுமாரும் , மூன்றாம் இடத்தினை கல்லடி கடற்கரை வீதியை சேர்ந்த வெ.ரவிச்சந்திரனும் பெற்றுக் கொண்டனர்

தொடர்ந்து கல்லடிக் கடற்கரையில் கடற்கரை சிரமதானத்தினை கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் ஆரம்பித்து வைத்தார். இந்நிகழ்வில் பொதுமக்கள் உள்ளுராட்சி திணைக்கள ஊழியர்களும் பங்கு பற்றினர். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .