Suganthini Ratnam / 2010 செப்டெம்பர் 26 , மு.ப. 07:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(வி.ரி.எஸ்)
இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பிரட்றிக், ஈபேர்ட் மன்றத்துடன் இணைந்து ஆசிரியர் உரிமைகள் தொடர்பில் மட்டக்களப்பு ஆசிரியர் கலாசாலையில் இரண்டு நாள் கருத்தரங்கை நடத்தி வருகிறது.
நேற்று சனிக்கிழமை ஆரம்பமான இச்செயலமர்வு இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது.
இதில் மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்.
பொதுச் செயலாளர் த.மகாசிவம் நேற்றைய நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இதேவேளை, இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் மீண்டும் உறுதியாக செயற்பட தீர்மானித்துள்ளது.
அதற்கு முன்னோடியாக அதன் கிளைகளை நாடளாவிய ரீதியில் புனரமைத்து வருகிறது.
அந்த வகையில், காரைதீவுக் கிளைக் கூட்டம் நேற்று முந்தினம் வெள்ளிக்கிழமை காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் சங்கத்தின் மாவட்டச் செயலாளரும் தேசிய பிரசாரச் செயலாளருமான வி.ரி.சகாதேவராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது, சங்கப் பொதுச் செயலாளர் த.மகாசிவம் உரையாற்றியதுடன் உறுப்பினர்களின் ஐயங்களையும் தெளிவுபடுத்தினார்.
53 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
53 minute ago
1 hours ago
2 hours ago