2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை:கிழக்கு மாகாண சபை உறுப்பினர்

Super User   / 2010 செப்டெம்பர் 26 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கே.எஸ்.வதனகுமார்)

டைனமைற் மற்றும் தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி சட்டவிரேத மீன் பிடியில் ஈடுபடுவதனால் மீன் இனங்கள் அழிந்து போகின்றன. இதனால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றார்கள். சட்டவிரேத மீன் பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாரை பணித்துள்ளதாக  மட்டக்களப்பு மாவட்ட மீனவர் கூட்டுறவு சமாஜத்தின் தலைவரும் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான பி.பிரசாந்தன் தெரிவித்தார்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மீன்பிடி உபகரணம் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை கடற்றொழில் நீரியல் வள அபிவிருத்தி திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மீனவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றியா அவர்,

"மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடும் போது சட்டவிரோத மீன் பிடியில் ஈடுபடுவதை நிறுத்த வேண்டும்.  அவ்வாறு நிறுத்தாத பட்சத்தில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸாருக்கு முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் பணித்துள்ளார்.

மட்டக்களப்பில் மாதம் ஒன்றுக்கு 30 கோடி ரூபா மதுபானத்திற்காக செலவு செய்யப்படுகின்றது. இதில் அதிகமானேர் மீனவர்களாகவே உள்ளனர்.

இதனால் தான் தங்களது அடிப்படை தேவையாகிய வீடு, மலசல கூடத்தைக் கூட கட்ட முடியாமல் வெளிநாட்டவர்களை காத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஏனையோரிடம் கையேந்தி வாழ்வதை எமது சமூகம் கைவிட வேண்டும். யுத்தமொன்று இனி வரமாட்டாது. எவரும் கொண்டு தருவதற்கு சந்தர்ப்பம் இல்லை. மற்றவர்களை எதிர்பார்த்து கையேந்துவதை தவிர்த்து, தங்களது குடும்ப பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பி.பிரசாந்தன் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--