2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி வறிய மாணவர்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 28 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எல்.தேவ்)

ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் 173 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் 20ஆவது இடத்தில் சித்தி பெற்ற மட்டக்களப்பு கோட்டைமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி ஜஸ்மிகாவின் தாயார் படுவான்கரையிலுள்ள பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் பரீட்சைக்கான புத்தகங்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.
 
எருவிலைச் சேர்ந்த சமூக சேவை உத்தியோகத்தரான நவரெட்ணம், மட்டக்களப்பு தொழில்நுட்பக் கல்லூரியின் முகாமைத்துவ உதவியாளர் புகழினி ஆகியோர் தமது மகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய மகிழ்ச்சியைப் பகிரும் வகையில் இந்த அன்பளிப்புகளை வழங்கியுள்ளனர்.
 
படுவான்கரைப் பிரதேசங்களிலுள்ள 10 பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் மாதிரி வினாத்தாள் புத்தகங்களையும், வறுமைக்கோட்டின் கீழ் உள்ள மாணவர்கள் கல்வி பயிலும் 10 பாடசாலைகளுக்கு புலமைப்பரிசில் புத்தகங்களையும் கையளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
 
இது போன்று ஏனைய புலமைப்பரிசில் பரீட்சையில் தமது பிள்ளைகள் சித்தி பெற்ற பெற்றோர்களும், வீணான வகையில் விருந்துபசாரங்களில் ஈடுபடாமல் மட்டக்களப்பின் போரதீவு, பட்டிப்பளை, வவுணதீவு பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள பாடசாலைகளுக்கு செய்ய வேண்டும். இதன் மூலம் எதிர்காலத்தில் பல சாதனையாளர்களை உருவாக்க முடியும் என  மட்டக்களப்பு தொழில்நுட்ப கல்லூரி அதிபர் எம். குணரெட்ணம் தெரிவித்தார்.
 
அதிபரின் வேண்டுகோளுக்கிணங்கவே ஜஸ்மிகாவின் பெற்றோர் பாடசாலைகளுக்கு புத்தகங்களை அன்பளிப்புச் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
 


  Comments - 0

  • மகாதேவா Wednesday, 29 September 2010 01:19 AM

    இது ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--