2020 செப்டெம்பர் 28, திங்கட்கிழமை

கொங்கிறீட் வீதிகளை பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் திறந்து வைத்தார்

Super User   / 2010 செப்டெம்பர் 27 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

                                                

                                                                              (றிபாயா நூர், சக்தி வேல்)

பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்தார்.

அங்கு கமநெகும திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்டுள்ள கொங்கிறீட் வீதிகளை அமைச்சர் திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.

களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மன்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுகளில் கமநெகும திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கொங்கிறீட் வீதிகளையும்  இதன் போது பிரதியமைச்சர் திறந்து வைத்து மக்கள் பாவனைக்கு கையளித்தார்.

பிரதியமைச்சர் முத்து சிவலிங்கத்துடன் கமநெகும திட்ட பணிப்பாளர் திருமதி ஆர்.பி.அமரசிங்கவும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கு விஜயம் செய்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா. நெடுஞ்செழியன் பிரதியமைச்சரையும் அதிகாரிகளையும் களுவாஞ்சிகுடியில் வைத்து வரவேற்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--