2020 செப்டெம்பர் 22, செவ்வாய்க்கிழமை

மட்டு. கல்குடா பிரதேசத்தில் மீள்குடியேறிய மீனவர்களுடன் கருணா கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 30 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எல்.தேவ்.)
 
மட்டக்களப்பு கல்குடா பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் அப்பிரதேசங்களில் வந்து குடியேறியபெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மீனவர்களை மீள்குடியேற்ற பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின்போது, மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் திஸாநாயக்க, கோரளைப்பற்று பிரதேச செயலாளர் கிரிதரன் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சின் இணைப்புச் செயலாளர் பொன்.ரவீந்திரன் உள்ளிட்டோரும் திணைக்கள அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

மீளக்குடியேறியுள்ளவர்களிடம் அவர்களது பிரச்சினைகள் மற்றும் தேவைகள் குறித்துக் கலந்துரையாடிய அமைச்சர் அவர்களது குடியிருப்புக்களையும் பார்வையிட்டார்.

அத்துடன் அவர்களது இருப்பிடம், தொழில் சார்ந்த பிரச்சினைகள் இருந்தால் தனது அமைச்சுடன் தொடர்பு கொள்ளுமாறும் தெரிவித்தார்.

வடக்கு கிழக்கின் அனைத்துப் பிரதேசங்களிருந்தும் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்திருந்த பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மீளக்குடியேறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--