2021 மார்ச் 09, செவ்வாய்க்கிழமை

மட்டு. சிறையிலுள்ள அரசியல் கைதிகள் தமது விடுதலைக்கு உதவுமாறு த.தே.கூட்டமைப்பிடம் கோரிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 01 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

alt(ஜவ்பர்கான், ஆர்.அனுருத்தன்)

எவ்வித விசாரணைகளுமின்றி மிக நீண்ட காலமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தங்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விசாரணையின்றி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள், தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இன்று மாலை மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு விஜயம் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரனிடமே இக்கோரிக்கையை  அரசியல் கைதிகள் விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த  நாடாளுமன்ற உறுப்பினர்  அரியநேத்திரன்,

இது தொடர்பாக பலமுறை ஜனாதிபதியிடம் கேட்டுள்ளோம். எனினும் விடுதலை தொடர்பாக ஆரோக்கியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவில்லை என்றார் அவர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .