Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 06 , மு.ப. 04:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.எல்.ஜவ்பர்கான்)
மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாண்டு அபிவருத்தி பணிகளுக்கென சர்வதேச உதவி நிறுவனங்கள் 15,319 மில்லியன் ரூபாவை ஒதுக்கீடு செய்துள்ளதாக மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் இரா.நெடுஞ்செழியன் தெரிவித்தார்.
இந்நிதியின் மூலம் மாவட்டத்தின் சகல பிரதேச செயலகப்பிரிவுகளிலும் 676 அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் வரையில் 8,946 மில்லியன் செலவில் சுமார் 60 சதவீத அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்துள்ளன.
ஆசிய அபிவிருத்தி வங்கி, உகல வங்கி என்பனவற்றினூடாகவே இந்நிதியொதுக்கீடுகள் இடம் பெற்றுள்ளன. நெக்டெப், நெகோர்ட், ஜெய்கா, ஜெபிக், ஏ.எப்.டி, நியாப், நேர்ப் ஆகிய நிறுவனங்களுடாக அபிவிருத்திப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குடிநீர்த்திட்டம், கல்லடிபாலம், திருக்கொண்டியாமடு முதல் அக்கரைப்பற்று வரையான காபர்ட் வீதி என்பன வெளிநாட்டு நிதியில் மேற்கொள்ளடும் பிரதான அபிவிருத்தி பணிகள் என்பது குறிப்படத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
6 hours ago