2021 மார்ச் 05, வெள்ளிக்கிழமை

காலாவதியான உணவுப் பொருட்களை விற்ற உணவு விடுதிக்கு எதிராக நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எல்.தேவ்)

மட்டக்களப்பு நகரின் கோவிந்தன் வீதியிலுள்ள உணவு விடுதியொன்றில் பாவனைக்குதவாத பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் மட்டக்களப்பு மாநகர சபையின் பொதுச் சுகாதார பரிசோதகர் என்.தேவநேசன் தெரிவித்தார்.

குறித்த உணவு விடுதி குறித்து தமக்குக் கிடைத்த முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் இன்று பிற்பகல் தானும் மேற்பார்வை பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆர்.நந்தகுமார் ஆகியோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்திய போதே இந்த காலாவதியான பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இந்தச் சோதனையின் போது வெளிநாட்டு குடிபானம் 11 ரின், காலாவதியான கோதுமை மற்றும் முறையான சுற்றுத் துண்டு இடப்படாத உணவுப் பொதிகள்  என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த உணவு விடுதியினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பொதுச் சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

  சில தினங்களுக்கு முன்னர் பிரபல வர்த்தக நிலையம் ஒன்றில் காலாவதியான பல பொருட்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .