2021 பெப்ரவரி 28, ஞாயிற்றுக்கிழமை

வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் பரிசளிப்பு விழா

Super User   / 2010 ஒக்டோபர் 08 , பி.ப. 04:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.அனுருத்தன் )

மட்டக்களப்பு, வாழைச்சேனை இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று கல்லூரி மண்டபத்தில் அதிபர் கே.தவராஜா தலைமையில் நடைபெற்றது.
 
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு  பரிசுகள் வழங்கி கெளரவித்தார்
 
இவ்வைபவத்தில் உரையாற்றிய கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் "கிழக்கு மாகாணத்தின் சமூக ,பொருளாதார அபிவிருத்தியை கட்டியெழுப்புவது என்றால் அதற்கு அடித்தளமாக அமைவது கல்வியாகும்". எனக் குறிப்பிட்டார்
 
இப்பரிசளிப்பு விழாவில் கெளரவ அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் நாகலிங்கம் திரவியம், பிரதேச செயலாளர் எஸ்.கிரிதரன், கல்குடா வலய பிரதி கல்விப் பணிப்பாளர் எஸ்.ஞானராஜா மற்றும் வாழைச்சேனை கோட்ட கல்வி அதிகாரி எஸ்.தங்கராஜா உட்பட பலரும் கலந்து கொண்டனர்.


 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .