Super User / 2010 ஒக்டோபர் 09 , பி.ப. 04:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
காத்தான்குடி வாவியில் இன்று மாலை மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர் ஒருவரை முதலையொன்று கடித்து வாவியினுள் இழுத்துச்சென்றுள்ளது.
இதையடுத்து இப்பிரதேசத்தில் பொதுமக்கள் அவ்விடத்தில் குவிந்து அம்மீனவரை காப்பாற்ற முயற்சித்தும் அது முடியவில்லை.
இச்சம்பவம் இன்று சனிக்கிழமை மாலை 6.30மணியளவில் காத்தான்குடி 5ஆம் குறிச்சி வாவியில் இடம்பெற்றுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார் மற்றும் பொதுமக்களும் இணைந்து வாவியில் முதலை கடித்து இழுத்துச்சென்ற மீனவரை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
முதலை கடித்து இழுத்துச் சென்றவர் புதிய காத்தான்குடி அப்றார் நகரைச்சேர்ந்த புகாரி என்பவரென காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
மேற்படி மீனவர் உயிரிழந்திருக்கலாமென காத்தான்குடி பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
6 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
8 hours ago
17 Jan 2026
17 Jan 2026