Menaka Mookandi / 2010 ஒக்டோபர் 10 , பி.ப. 01:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிபாயா நூர்)
மட்டக்களப்பு, வெளிச்சவீடு அமைந்துள்ள பகுதிக் கடலில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்கள் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று காலை ஐந்து இளைஞர்கள் இக்கடலில் குழிக்கச் சென்றுள்ளனர். இதன்போதே அதில் இருவர் கடலில் மூழ்கி மரணமடைந்துள்ளனர்.
மட்டக்களப்பு, நாவற்குடா, பூநொச்சிமுனை கடற்கரை வீதியைச் சேர்ந்த சிங்கராசா ஜோபின்(வயது 19) மற்றும் நாவற்குடா, கலாசார மண்டபத்திற்கு பின்பகுதியில் வசித்துவரும் தெய்வேந்திரன் கிருஸ்ணராஜ்(வயது 19) ஆகிய இரு இளைஞர்களுமே சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
இதில் கிருஸ்னராஜ் என்பவரின் சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. ஜோபின் என்பரின் சடலம் இதுவரை கண்டெடுக் கப்படவில்லை. பொதுமக்களும் மீனவர்களும் அப்பகுதி கடற்படையினருடன் இணைந்து சடலத்தை தேடி வருவதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago