2021 மார்ச் 08, திங்கட்கிழமை

மட்டக்களப்பில் மரநடுகை நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

(சிஹாரா லத்தீப்)

சுற்றாடல் அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில் இடம்பெறும் தேசிய மரநடுகைத் திட்டத்திற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்திலும் இன்று மரநடுகை நிகழ்வுகள் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் ஏற்பாட்டில் தேசிய மரநடுகை நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.

மாவட்ட செயலகத்தின் கணக்காளர் ர.நேசராஜா நிர்வாக உத்தியோகத்தர் கே.தயாபரன் உட்பட பல அதிகாரிகளும் பாடசாலை சுற்றாடல் படையணி மாணவர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இங்கு சுற்றாடல் முன்னோடி நிகழ்வுகளில் தெரிவான மட்டக்களப்பு மகாஜனாக் கல்லூரி மாணவர்களுக்கு பச்சைப் பதக்கம் அணிவிக்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட ஊடகப்பிரிவுத் தகவல்கள்  தெரிவிக்கின்றன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .