2021 மார்ச் 04, வியாழக்கிழமை

பிடிபட்ட முதலையை மக்கள் அடித்துக் கொன்றனர்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 16 , பி.ப. 07:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஜிப்ரான்)

காத்தான்குடி வாவியில் நேற்று சனிக்கிழமை மதியம் மடக்கி பிடிக்கப்பட்ட முதலை, வீதியில் கட்டி வைக்கப்பட்டு பெருமளவிலான மக்கள் பார்வையிட்டதுடன் முதலையை மக்கள் ஆத்திரத்தில் அடித்து கொன்றனர்.

மாலை ஸ்தலத்திற்கு விரைந்த காத்தான்குடி பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி காமினி ஜெயவர்த்தன தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

மட்டக்களப்பு மாவட்ட வன இலாகா அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட மிருக வைத்தியதிகாரி எம்.ஏ.ஹாதியினால் மரண பரிசோதனை நடாத்தப்பட்டு இராட்சத முதலை அழிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .